Home2025-10-04T23:59:01+00:00

Floral Icon 1

சிவாயநம

பல் அக விளக்கு

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் (04.011)

“விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே”

~திருமந்திரம்

ஓம் சிவாய நம

நம் குழுவின் நோக்கம் நம்மால் இயன்ற அளவில் ஏதேனும் ஒரு சைவ திருத்தொண்டினை தொடர்ந்து செய்ய வேண்டும் .

இதை நம் கருத்தில் கொண்டு,நம் குழுவின் மூலம் சிதிலமடைந்த சிவாலயங்கள் சீர்செய்யும் பணிக்கும், விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லா ஆலயத்திற்கு எண்ணெய் வழங்குதலும், திருத்தலங்களில் நடைபெறும் குடமுழுக்கு போன்ற சுபகாரியங்களுக்கு பொருள் வாங்கி தருவது போன்ற தொன்றினை தொடர்ந்து ஐந்துஆண்டு காலமாக  செய்து வருகின்றோம்.

இப்பணியானது நமது சிவநேசர்களால் ஒரே  குடும்பமாக செயல்பட்டு அனைவரும் இயன்ற சிறு தொகையினை மாதாமாதம் வழங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமே சாத்தியமாகிக் கொண்டு இருக்கிறது.. 

இத் தொண்டினை தொடர உள்ளன்புடன் பங்களித்து வரும் அடியார் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.

சைவ அடியார்கள் அனைவரும் நம் சொந்தங்களே, நாம் ஒன்றிணைந்து இப்பணியினை தொடர்ந்து செய்வோம்.

Play Video

தொடர்பு கொள்ள

  • தொடர்பு என்: +91 94421 80229
  • மின் அஞ்சல் : pallagavilakku@gmail.com
  • முகவரி: 15, ஜீவானந்தம் வீதி,
    அசோக் நகர், லாஸ்பெட்,
    புதுச்சேரி -605008

Go to Top